கனமழை எச்சரிக்கையின் காரணமாக இன்று (டிச. 02) சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி புயலாக வலுப்பெற்றது பெஞ்சல் புயல் என பெயர் வைக்கப்பட்ட நிலையில் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. புயல் கரையை கடந்த நிலையில் மழை விடாமல் கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில், சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே மழை பெய்ய தொடங்கிய நிலையில் தற்போது வரை அதாவது இரண்டு நாட்களாக மழை நீடித்து வருகின்றது. விடாமல் மழை பெய்து வருவதினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி மழையின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பல்வேறு சமவெளி பகுதிகளிலும் மழைநீர் தேங்கி மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கனமழை எச்சரிக்கையின் காரணமாக இன்று (டிச. 02) சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார்.
Readmore: ரசாயனங்களால் பச்சை நிற படலம் சூழ்ந்த மேட்டூர் அணை!. துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!.