கனமழை காரணமாக இன்று(டிச.2) பெரியார் மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 29ம் தேதி உருவான ஃபெஞ்சல் புயல், நேற்று மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
பல்வேறு வட மாவட்டங்களுக்கு கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னை பல்கலைக்கழக இன்று தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுக்கான திருத்தப்பட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
Readmore: ஈரோட்டில் அதிர்ச்சி!. துப்பாக்கிச் சூட்டில் தந்தை பலி!. மகன்கள் கண்முன்னே நிகழ்ந்த சோகம்!