சேலத்தில் குழந்தை திருமணம் செய்த 17 வயது சிறுமி கர்ப்பமானதையடுத்து, இளைஞரை ஆத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோவில் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர், சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (30), சரக்கு வேன் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் இவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம், மலைவேப்பங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, சிறுமியுடன் அக்கம் பக்கத்தினருக்கு தெரியாமல் குடும்பம் நடத்திவந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த 6 மாதங்களுக்கு முன் சிறுமி கர்ப்பமாகி இருக்கிறார். இதனால் பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.சிறுமிக்கு 17 வயது ஆகிறது என்பது மருத்துவமனையில் உறுதி செய்யப்படவே, மருத்துவர்கள் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், குமரேசன் உட்பட 5 பேரின் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.