8ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பெற்றோர்களே குழந்தை திருமணம் செய்து வைத்த சம்பவம் தொடர்பாக மாப்பிள்ளை உட்பட 5 பேர் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளைஞர். இந்தநிலையில், இவருக்கும் கிருஷ்ணகிரியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவிக்கும் பெற்றோர்களே குழந்தை திருமணம் செய்துவைத்துள்ளனர். அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவி, வழக்கம்போல், திங்கள் கிழமை பள்ளிக்கு சென்றுள்ளார். கழுத்தில் மஞ்சள் தாலியுடன் வந்த மாணவியை பார்த்து ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மாணவியிடம் ஆசிரியர் விசாரித்துள்ளனர். அப்போது, ஞாயிற்றுக்கிழமை தான் தனக்கு திருமணம் ஆனதாக மாணவி கூறியிள்ளார்.

இதையடுத்து, ஆசிரியர்களே சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து சென்ற குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் சமூக நலத் துறை அலுவலர்கள், சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர். மேலும், இதுதொடர்பான புகாரின் பேரில், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸார், மணமகன், அவரது பெற்றோர்கள் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Readmore: அரிசி முதல் பாத்ரூம் வாளி வரை!. வீட்டில் இந்த பொருட்களை எல்லாம் காலியாக வைத்தால் பண பிரச்சனை வருமாம்!.