முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசைக் கண்டித்து தேமுதிக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்றும் மக்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது என்றும் குற்றம்சாட்டினார். தமிழக மக்களும் தமிழ்நாடும் எல்லா வகைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் எந்த பிரச்னையும் இல்லை, நல்லாட்சி நடப்பதுபோல், முதல்வர் பேசி வருகிறார்.

முதல்வரால் நடக்க முடியவில்லை, கைகள் நடுங்குகின்றன. அவருக்கு உடல்நல பாதிப்பு உள்ளது. கை நடுக்கம் தெரியக்கூடாது என்பதற்காக பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டபடி நடந்து வருகிறார். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் முதல்வர் இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். மூத்த அமைச்சர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களில் யாருக்காவது துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Read More : பொதுச்செயலாளர் என எப்படி குறிப்பிடலாம்..? அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய கோர்ட்..!! மன்னிப்பு கோரினார் இபிஎஸ்..!!