தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் நாளை சேலம் பயணம் மேற்கொள்ளவுள்ளதால் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்.

இதையொட்டி அவர் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் மாவட்டம் காமலாபுரம் விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை திரும்ப உள்ளார். எனவே, சேலம் மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது”

Readmore: திக்.திக்!. சேலத்தில் நொடிப்பொழுதில் நடந்த கோர விபத்து!. தனியார் பேருந்துகள் மோதியதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!