சிட்கோ தொழிற்பேட்டையில் இருந்து வெளியாகும் ரசாயன கழுவுகள் மேட்டூர் உபரிநீர் கால்வாயில் கலந்து நுரைப்பொங்குவதால் சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

மேட்டூர் நகராட்சிக்கு எல்லைக்குள் சிட்கோ தொழில் வளாகம் அமைந்துள்ளது.இதில், மெக்னீசியம் சல்பைட் உரம் தயாரிக்கும் ஆலைகள், பிளாஸ்டிக் பைப், காகிதம், அட்டை தயாரிக்கும் நிறுவனங்கள் உள்பட, 120 சிறு தொழிற்கூடங்கள் உள்ளது. இந்தநிலையில், இந்த தொழிற்பேட்டையில் இருந்து சட்டவிரோதமாக ரசாயன கழிவுகள் மேட்டூா் அணையின் உபரி நீா் போக்கி கால்வாயில் கலந்து சங்கிலி முனியப்பன் கோயில் அருகே உள்ள காவிரியில் கலக்கிறது.

இதனால், நுரைப்பொங்கி காற்றில் பறக்கிறது. இதன் காரணமாக சுற்றுச்சுழல் மாசடைவது மட்டுமல்லாமல், மீன்கள் இறக்கும் அபாயம் மற்றும் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. மேலும், துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் இந்த கழிவு நீர் கலப்பதை தடுக்கவேண்டும் என்றும், இல்லையென்றால் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Readmore: தேசிய அளவிலான ஹாக்கி போட்டி!. சங்ககிரி மாணவர் தேர்வு!.