சேலம் கந்தபட்டி பைபாஸில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் 3 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெங்களூரில் இருந்து பருத்தி பேல்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருப்பூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது சேலம் குரங்குச்சாவரி அருகே கந்தம்பட்டி மேம்பாலத்தில் முன்னாள் சென்ற வாகனம் திடீரென பிரேக் போடப்பட்டதால் லாரியை கட்டுப்பாடுத்த ஓட்டுநர் முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் லேசான காயங்களுடன் லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி தலைகுப்புற கவிழ்ந்ததால் அதனை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். இதனால் கொண்டலாம்பட்டி – ஏவிஆர் ரவுண்டானா வரை சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்டநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அணிவகுத்து நின்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

Readmore: ஷாக்!. சமையல் எண்ணெய் மீண்டும் மீண்டும் சூடுபடுத்துகிறீர்களா?. புற்றுநோய் ஆபத்து!. ICMR வார்னிங்!