சேலத்தில் காரில் சென்று கொண்டிருந்த தம்பதியின் கார் விபத்தில் சிக்கியதால் 9 மாத குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு பண்டிகையை கொண்டாட கிளம்பி வருகின்றனர். அந்த வகையில் தீபக் அழகப்பன், தெய்வானை என்ற தம்பதி தங்களது 9 மாத குழந்தையுடன் காரில் சேலத்திற்கு கிளம்பியுள்ளனர். சென்னையில் இருந்து புறப்பட்ட இவர்களின் கார் சேலத்தின் வாழப்பாடி அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக தரைப்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் பயங்கரமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் தம்பதியர் படுகாயமடைந்தனர். ஆனால், அவர்களின் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. காயமடைந்த தீபக் மற்றும் தெய்வானை இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து குழந்தையின் உடலை மீட்டனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Readmore: 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் திருப்பதி மலைக்கு வர வேண்டாம்..!! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!