சேலம் அருகே சொத்துத் தகராறில் திமுக கிளை செயலாளர், தனது அண்ணன் மருமகளை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி புதுகாலனியை சேர்ந்தவர் பழனியம்மாள். கணவரை இழந்த இவர், பிள்ளைகளுடன் தனது மாமனார் வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில், அதே பகுதியை சேர்ந்த திமுக கிளை செயலாளராக பழனியம்மாளின் சின்ன மாமனார் வசித்து வருகிறது. இந்தநிலையில், சொத்து பிரச்சனை காரணமாக பழனியம்மாள் மற்றும் திமுக கிளை செயலாளரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில், கணவரை இழந்த தவித்து வரும் பழனியம்மாளை கடந்த 2 நாட்களுக்கு முன் சொத்தை அபகரிக்கும் வகையில் கொலை மிரட்டல் விடுத்து கையை பிடித்து இழுத்து கிளை செயலாளர் துரத்திச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனியம்மாள் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதநிலையில், தாக்குதல் காட்சிகளோடு சென்று சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். சொத்து தகராறில் அண்ணன் மருமகளிடம் அடிதடியில் ஈடுபட்ட திமுக கிளை செயலாளரின் செயலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Readmore: தங்கத்தை வாரி குவிக்கும் தமிழ்நாட்டுப் பெண்கள்!. உலகிலேயே தமிழக பெண்களிடம்தான் அதிக தங்கம் இருக்கு!.