பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாட்டில் மேலும் ஒரு நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மாணவர்கள் மத்தியில் ஜனவரி மாதம் விடுமுறை மாதமாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்த மாதத்தில் பொங்கல் பண்டிகை, குடியரசு தினம் என தொடர் விடுமுறைகள் நிறைய வரும். இந்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1ஆம் தேதி ஏற்கனவே அரசு விடுமுறை விடப்பட்ட நிலையில், ஜனவரி 14, 15, 16ஆம் தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா வருகிறது.

இந்தாண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை), ஜனவரி 15ஆம் தேதி (திருவள்ளுவர் நாள்), ஜனவரி 16ஆம் தேதி (உழவர் நாள்) கொண்டப்படுகிறது. இதன் காரணமாக ஜனவரி 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. ஆனால், 17ஆம் தேதி வேலை நாளாக இருந்தது. இந்நிலையில், ஜனவரி 18, 19ஆம் தேதிகள் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், 17ஆம் தேதியான வெள்ளிக்கிழமையும் விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. தற்போது இந்த கோரிக்கையை ஏற்று வரும் 17ஆம் தேதியும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 14, 15, 16, 17, 18, 19ஆகிய நாட்கள் தொடர் விடுமுறையாகும்.

Read More : ”அதுக்கு மட்டும்தான் நீ”!. ”என் பொண்டாட்டிய விட முடியாது” எனக்கூறிய கள்ளக்காதலன்!. போதையில் போலீஸ் ஸ்டேஷனில் அலப்பறை கொடுத்த பெண்!..