விஜய் டிவியில் நாளை ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை அடித்துக் கொள்ள முடியாது. இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் தாண்டி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதில் கலந்து கொள்வதற்காக பல பிரபலங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் முதல் சீசன் தொடங்கப்படும் போது பெரிய அளவில் எதிர்பார்ப்பும், சர்ச்சைகளும் இருந்தது.
அதற்குப் பிறகு தங்களுக்கு தெரிந்த பிரபலங்கள் தங்களுடைய நிஜ வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்த்துக் கொள்வதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க பலர் தொடங்கினார்கள். அது முதல் சீசனில் கிடைத்த வரவேற்பு காரணமாகவே தற்போது வரைக்கும் 7வது சீசன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. அதுபோல நாளை அக்டோபர் 6ம் தேதி பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்க இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் பல சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் தமிழில் இப்போதுதான் 8 சீசன் வருகிறது.
கடந்த சீசன்களில் தொகுப்பாளராக இருந்துவந்த கமல், படத்திலும் அரசியலிலும் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இதன் காரணமாக இந்த சீசனிலிருந்து அவர் விலகினார். அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி நிகழ்ச்சியைத் தொகுக்க உள்ளார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை ஆரம்பமாகவுள்ளது. அந்தவகையில் நிகழ்ச்சியில் பங்கேற்கும் 18 போட்டியாளர்கள் குறித்துப் பார்ப்போம்.
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமான நடிகர் ரஞ்சித் இடம்பெற்றுள்ளார். விஜய் டிவியில் பிரபலமான சுனிதா, தர்ஷா குப்தா ஆகியோரும் இந்த சீசனில் இடம் பெறுகிறார்கள். சீனியர் நடிகையான ஐஸ்வர்யா, சின்னத்திரை நடிகை அன்ஷிதா கலந்து கொள்கின்றனர். சார்பட்டா பரம்பரை மற்றும் குக் வித் கோமாளியின் மூலம் பிரபலமான சந்தோஷ் பிரதாப், இளம் நடிகை சச்சனா, பாடகர் அனீஸ், நடன இயக்குனர் கோகுல்நாத் ஆகியோரும் இந்த சீசனில் கலந்து கொள்கின்றனர்.
மாடல் அழகியான சஞ்சனா, சின்னத்திரை நடிகர் அர்னவ், நடிகை பவித்ரா, மேலும் பாக்கியலட்சுமி தொடரின் மூலம் பிரபலமான விஜே விஷால் மற்றும் விஜய் டிவியின் பிரபலம் தீபக் தினகரன் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொள்கின்றனர். குக் வித் கோமாளி மூலம் பிரபலமான ஜோயா, பாரதி கண்ணமா சீரியல் ஃபேம் அருண் பிரசாந்த், விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் ஆகியோரும் பங்குபெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.