சேலம்-கோவை பேருந்து பயணிகளை ஏற்றுக் கொண்டு சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டது. அந்தப் பேருந்து கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்திற்கு முன்பாக கார் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென கார் நின்றதால் பேருந்து, இரண்டு கார்கள் மற்றும் ஆட்டோ என அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடி உடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி காணப்பட்டது. அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதால் பேருந்தில் இருந்த பயணிகள் நடுவழியில் நின்று தவித்தனர் மேலும் அந்த பேருந்தில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என பயணித்த நிலையில் விபத்தில் அனைவரும் பதற்றம் அடைந்தனர். ஒரு சில பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி பேருந்திற்காக மேம்பாலத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு போலீசார் வந்த பிறகு வாகனங்கள் அங்கிருந்து அகற்றப்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். ஐந்து வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.