நாம் தினமும் சமையல் செய்யும்போது உணவின் ருசியை அதிகரிக்க சமையல் எண்ணெயை பயன்படுத்துவது வழக்கம். எண்ணெய் இல்லாமல் எந்தவொரு உணவையும் ருசியாக சமைக்க முடியாது. இவை உணவின் ருசியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளையும் வழங்குகின்றன. ஆனால், இந்த சமையல் எண்ணெய்கள் ஆரோக்கியமானதாக இல்லாவிட்டால், உயர் அழுத்தம், உடல் பருமன், வயிறு தொடர்பான பிரச்சினைகளை உண்டாக்கும். அவை அனைத்துமே இதய நோய்களுக்கு தான் வழிவகுக்கும். முகத்தில் அதிகப்படியான எண்ணெய் வடிவது, முகப்பரு போன்ற சரும பிரச்சனை வருவதற்கும் ஆரோக்கியமற்ற சமையல் எண்ணெய் தான் காரணம்.

இந்தநிலையில், ரீபைண்ட் ஆயில் பயன்படுத்துவதால் கூடுதல் ஆபத்து ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கொச்சி ஆயுர்வேத ஆராய்ச்சி பல்கலைக்கழக மையத்தின் கூற்றுப்படி, ஆண்டுதோறும் 20 லட்சம் பேர் உயிரிழப்புக்கு ரீபைண்ட் ஆயில் காரணமாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரீபைண்ட் ஆயில் டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ-வை சேதப்படுத்துகிறது. இது மட்டுமல்லாமல், மாரடைப்பு, மாரடைப்பு அடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இயலாமை, புற்றுநோய், எலும்பு பலவீனம், மூட்டு வலி, இடுப்பு வலி, சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, கொலஸ்ட்ரால், பார்வை இழப்பு, புரோஸ்டேட் நோய், மலட்டுத்தன்மை, மூல நோய் மற்றும் தோல் நோய்களையும் ஏற்படுத்தும்.

ரீபைண்ட் ஆயில் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? விதைகளின் மேல் ஓடுகளுடன் சேர்த்து எண்ணெய் பிழிந்து, பின்னர் சுத்திகரிக்கப்பட்டு, சுவை, மணம் மற்றும் நிறமற்றதாக மாற்றப்படுகிறது. ஆனால், இந்த செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் ஆபத்தான அமிலங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். இந்த செயல்பாட்டில் டயர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தாமிரம் போன்ற கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இதனால்தான் இந்த எண்ணெய் நச்சுத்தன்மையுடையதாக மாறுகிறது. இதை உட்கொள்வதால் பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

Readmore: திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி!. சாலையில் ஆறாக ஓடிய 20,000 லிட்டர் பால்!. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஓட்டுநர்!