ஆதார் அட்டை என்பது மத்திய அரசு இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படக் கூடிய ஒரு அடையாள அட்டை. உங்களின் முகவரி மற்றும் புகைப்பட அடையாளச் சான்றாக ஆதார் அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம். அண்மை காலமாக பல்வேறு மோசடிகள் ஆதார் அட்டைகளை பயன்படுத்தி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் இவற்றிலிருந்து தப்பிக்க எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். பொதுமக்கள் ஆதார் அட்டைகளை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆதார் அட்டை மோசடிகளில் இருந்து தப்பிக்க உதவக்கூடிய குறிப்புகளை பார்க்கலாம்.
ஒருவரது ஆதார் எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிய, முதலில் மை ஆதார் இணைதயளத்துக்குச் செல்ல வேண்டும். ஒருவரது ஆதார் எண்ணை உள்ளிட்டு, கேப்சா கோடு சரியாக பதிவிட வேண்டும். லாகின் வித் ஓடிபி என்ற வாய்ப்பை கிளிக் செய்து, ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்டிருக்கும் செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபியை உள்ளிட்டால், ஆதார் எண் விவரத்துக்குள் செல்லும்.
ஆதன்டிகேஷன் ஹிஸ்டரி என்பதை கிளிக் செய்து, அதற்கு அருகே உங்களுக்கு எந்த காலக்கட்டத்துக்குள் விவரங்களை அறிய வேண்டுமோ அதனை தேர்வு செய்ய வேண்டும். அப்போது, உங்கள் ஆதார் எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம். ஆம் என்றால், யுஐடிஏஐ-க்கு உடனடியாக புகார் அளிக்கலாம்.