சேலத்தில் ஓடும் பேருந்தில் நகைப்பறிப்பில் ஈடுபட முயன்ற பெண், தப்பி ஓட முயன்ற போது, கையும் களவுமாக பொதுமக்கள் பிடித்தனர்.

சேலத்தை சேர்ந்த பவித்ரா என்பவர் தனியார் நிறுவத்தில் வேலை செய்கிறார்.. இவர் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு, சேலம் பழைய பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் பவித்ராவின் பின்னால் அப்பாவி போல் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர், பவித்ராவின் கழுத்தில் இருந்த தங்க நகையை திடீரென திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த பவித்ரா திருடுறாங்க என்று சத்தம் போட்டுள்ளார். இதனால் உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்ட போது, அந்த பெண் பேருந்தின் நடுவில் இருந்து வேகமாக வந்து இறங்கி தப்பி ஓடமுயன்றார். மின்னல் வேகத்தில் ஓட முயன்ற அந்த பெண்ணை சாலையில் நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் பிடித்தனர். பின்னர் அந்த பெண்ணை அவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Readmore: நெகிழ்ச்சி!. 7 நாள் குழந்தையை காப்பாற்ற ஆம்புலன்ஸில் பறந்த இதயம்!. திருச்சி – கோவை பரபரப்பான அந்த நிமிடங்கள்!. ஓட்டுநருக்கு குவியும் பாராட்டுகள்!