சமோசா, சிப்ஸ் ஆகிய துரித உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் பழக்கம் நீர்ழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என இந்திய மருத்துவக் கவுசில் Indian Council of Medical Research (ICMR) வெளியிட்டுள்ள ஆய்வு இதழிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய் குறித்து Madras Diabetes Research Foundation, ஐ.சி.எம். ஆர். சேர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் Advanced Glycation End-products (AGEs) அதிகம் உள்ள உணவுகள் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது. அதிக AGEs இருக்கும் உணவுகளான பிரெஞ்சு ப்ரைஸ், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், சமோசா, சிப்ஸ், பரோட்டா, சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் ஆகியவை இதில் அடங்கும் என International Journal of Food Sciences and Nutrition என ஆய்வு இதழில் வெளியாகியுள்ள ஆராய்ச்சி கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 வாரங்கள், உடல் பருமன் கொண்ட 38 நபர்கள் பங்கேற்ற ஆராய்ச்சியில் இரு வெவ்வேறு டயட் முறை பின்பற்றப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களின் Body Mass Index (BMI) 23 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தது. ஒரு குழுவினர் AGEs அதிகம் உள்ள உணவுகளையும் மற்றொரு குழுவினர் AGEs குறைவாக இருந்த உணவுகளை சாப்பிட்டு வந்தனர். அதிகமாக AGEs உள்ள உணவுகளை சாப்பிட்டவர்களுக்கு இன்ஃபளமேசன் அதிகமாக இருந்தது. அவர்களுக்கு குறைந்த AGEs உள்ள பச்சை காய்கறிகள், பழங்கள், மீன், வேகவைத்த உணவுகள், ப்ரவுன் அரிசி ஆகியவை பரிந்துரைக்கப்பட்டன.
இந்த ஆராய்ச்சியில் குறைந்த AGEs உள்ள உணவுகள் இன்ஃபளமேசனை குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்லது. இதன் மூலம் இந்தியாவில் அதிகரித்து வரும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த குறைந்த AGEs கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். எண்ணெயில் பொரிப்பது, ரோஸ்ட் செய்வது, க்ரில் உள்ளிட்ட சமையல் முறைகள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயத்தை அதிகப்படுத்தும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய வெளியான தரவுகளின்படி இந்தியாவில் 101 மில்லியன் மக்களுக்கும் அதிகமாக நீரிழிவு நோய் பாதிப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் உழைப்பு குறைவது, உடற்பயிற்சியின்மை, ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடாதது, துரித உணவுகள் ஆகிய வாழ்க்கை முறை மாற்றங்களினால் இந்தியாவில் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.