இன்றைய டிஜிட்டல் உலகில் வாட்ஸ்அப் நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது, இதன் மூலம் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மெசேஜ் அனுப்பலாம், வீடியோக்களை அனுப்பலாம், போட்டோக்களை அனுப்பலாம்.
சில வருடங்களில், உடனடி செய்திகளை அனுப்புவதற்கான பிரபலமான செயலியாக WhatsApp ஆனது. இது உலகம் முழுவதும் 3 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. ஆனால் இன்று அது ஹேக்கர்களின் மிகப்பெரிய இலக்காக உள்ளது, உங்கள் வாட்ஸ்அப்பில் வழக்கத்திற்கு மாறான செயல்பாட்டை நீங்கள் கண்டால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறிகள்: நீங்கள் கோராத, வாட்ஸ்அப்பில் இருந்து சரிபார்ப்புக் குறியீட்டைப் பெற்றால், அது சிவப்புக் கொடியாகும். யாரோ ஒருவர் உங்கள் கணக்கை அணுக முயற்சிக்கிறார் என்று அர்த்தம். நீங்கள் சேர்க்காத புதிய தொடர்புகளைக் கண்டால், உங்கள் கணக்கை வேறு யாரேனும் அணுகலாம் என்பதைக் குறிக்கிறது. “linkes devices” பகுதிக்குச் செல்வதன் மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் எந்தெந்த சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை நீங்கள் சரிபார்க்கலாம்.

நீங்கள் அனுப்பாத செய்திகளை உங்களிடமிருந்து பெறுவதாக உங்கள் நண்பர்கள் தெரிவித்தால், அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களை ஏமாற்றும் வேலையாக இருக்கலாம். நீங்கள் திடீரென்று வாட்ஸ்அப்பில் உள்நுழைய முடியாமல் போனால், உங்கள் கணக்கு கையகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று புரிந்துக்கொள்ளுங்கள்.

Readmore: தேவசேனாவுக்கு திருமணம்!. மாப்பிள்ளை யாரு தெரியுமா?