சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வைகுந்தம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி வைகுந்தம் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் ஜெராக்ஸ் எடுக்க சென்றுள்ளார். அப்போது ஜெராக்ஸ் கடை உரிமையாளர் பள்ளி மாணவியிடம் ஆசைவார்த்தை பேசி சில்மிஷம் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவி ஜெராஸ் கடையில் நடந்த சம்பவங்களை பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளார். சம்பவம் குறித்து மாணவியன் பெற்றோர்கள் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் சங்ககிரி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து வைகுந்தம், மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர் முத்துசாமி மகன் முரளிதரன் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.