மேட்டூர் அருகே பாலமலை அடிவாரத்தில் 2 சிறுத்தைகள் ஜோடியாக உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக 30-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழி, நாய் உள்ளிட்டவைகளை சிறுத்தை வேட்டையாடி வருகிறது. மேலும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த 27ம் தேதி காலை வெள்ளக்கரட்டூர் வனப்பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் அருகே சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது.
இதையடுத்து, இந்த சிறுத்தையை வேட்டையாடியதாக தின்னப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் முனுசாமி, 49, பெரியகொட்டாய் மீனவர், ராஜா, 54, குப்பண்ணகவுண்டர் தெரு வாழைக்காய் வியாபாரி சசிகுமார், 45 ஆகியோரை, மேட்டூர் வனத்துறையினர் கைது செய்தனர்.
இந்தநிலையில், மீண்டும் கொளத்துார், சாம்பள்ளி ஊராட்சி பாலமலை அடிவாரத்தில் கோம்பைக்காடு கிராம பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதாவது, ஒரு வாரத்துக்கு முன், கோம்பைக்காட்டை சேர்ந்த ஜோதியின் இரு கோழிகள், கடந்த, 6ல் விவசாயி குமார் காட்டில் ஒரு நாயை, மர்ம விலங்கு துாக்கிச்சென்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரு சிறுத்தைகள் ஜோடியாக கிராமத்தில் சென்றதாக, அப்பகுதி விவசாயிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
Readmore: ”கோடி ரூபாய் கொடுத்தாலும் குதிரையை கொடுக்க மாட்டேன் சார்”..!! அம்பானி குரூப்பை அலறவிட்ட விவசாயி..!!