மும்பை பிரபாதேவி பகுதியை சேர்ந்த (26 வயது) வங்கி ஊழியர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் அறிமுகம் இல்லாத நபருடன் அரட்டை அடித்து ஒரு மணி நேரத்தில் ரூ.2.50 லட்சத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 15 அன்று, நள்ளிரவு 1 மணியளவில், வங்கி ஊழியரின் இன்ஸ்டாகிராமில் தெரியாத பெண்ணிடமிருந்து ஒரு நட்பு கோரிக்கை வந்துள்ளது.

பெண்கள் விஷயத்தில் வீக்கான அந்த இளைஞர் அரட்டை அடித்து கொண்டிருந்தனர். மேலும், சிறிது நேரம் கழித்து இருவரும் தங்களுடைய வாட்ஸ்அப் எண்ணை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து, நள்ளிரவு 1.15 மணியளவில் அவருக்கு வாட்ஸ்அப்பில் வீடியோ கால் வந்துள்ளது. இதனை தொடர்ந்து, அந்த இளைஞரும் வீடியோ கல்லில் பேசியுள்ளார் திடீரென அந்த பெண் ஆடையில்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், அந்த இளைஞர் பேசிய 5 நிமிடங்களுக்குப் பிறகு, வீடியோ அழைப்பின் போது பதிவு செய்யபட்ட வீடியோவை அந்த வங்கி ஊழியரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதை அனுப்பிய அந்த பெண் பணம் அனுப்பு இல்லை என்றால் இந்த வீடியோ உங்கள் இன்ஸ்டாகிராம் நண்பர்களுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியுள்ளார்.

அதன்பின், அதிர்ச்சியடைந்த வாலிபர் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். மேலும், அந்த பதிவு செய்யபட்ட வீடியோவை அடிக்கடி அனுப்பி மிரட்டியதால் பொத்தமாக ரூ. 2.5 லட்சம் பணம் கொடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த வாலிபர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மும்பை தானே போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சைபர் கிரைம் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : தமிழ்நாட்டில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் வாபஸ்..? அமைச்சர் சொன்ன பரபரப்பு தகவல்..!!