சங்ககிரி பகுதியில் இளம்பெண்ணின் சடலம் சூட்கேசில் மீட்கப்பட்ட விவகாரத்தில், 25 நாட்களுக்கு பின் பெங்களூரை சேர்ந்த கொடூர பெண் குறித்து அதிர்ச்சி தகவல் அம்பலமாகி இருக்கிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பிஆர்எம் திருமண மண்டபத்திற்கு அருகே பாலம் உள்ளது. இந்த பாலத்திற்கு அருகில் கடந்த மாதம் 30ஆம் தேதி சந்தேகத்திற்குரிய ட்ராலி பேக் ஒன்று இருந்தது. இதனைப் பார்த்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த சங்ககிரி காவல்துறையினர், சூட்கேஸை திறந்து பார்த்தபோது, இளம்பெண்ணின் சடலம் நிர்வாண நிலையில் இருந்தது.
இதையடுத்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் எந்த முடிவும் கிடைக்காத நிலையில், சுமார் 150-க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, சம்பவ இடத்திற்கு அருகிலேயே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டு இருந்த கர்நாடக பதிவெண் கொண்ட காரின் உரிமையாளர் அபினேஷ் என்பவரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்து, அவரிடம் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி உண்மை அம்பலமானது.
பெங்களூரு பண்ணந்தூர் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் அபினேஷ் சாஹு – அஸ்வினி படேல். இவர்கள் ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான். ஓராண்டுக்கு முன்பு அபினேஷ்சாகு, தந்தை கார்த்திக்சந்திரசாகு நடத்தும் ஆதரவற்றோர் ஆசிரமத்திற்கு சென்று சுமைனா (15) என்ற சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்து வந்துள்ளார். சம்பவத்தன்று அஸ்வின்பட்டிக்கு சிறுமி வெந்நீர் எடுத்த வந்தபோது கை தவறி அவரது மீது விழந்தது. இதில் ஆத்திரமடைந்த அவர் பூரிக்கட்டையால் சிறுமியை சரமாரியாக அடித்துள்ளார். இதில் சிறுமி மயங்கி சோர்வடைந்தாள். மாலையில் வீடு திரும்பிய அபினேஷ்சாகு மனைவியை திட்டிவிட்டு சிறுமி யை ஓய்வெடுக்கச்சொல்லிவிட்டு அபினேஷ்சாகு மறுநாள் பணிக்கு சென்றுவிட்டார்.
அதன்பின் அஸ்வின்பட்டில் சிறுமியிடம் வீட்டு வேலை செய்யும்படி கூறியுள்ளார். அப்போது கீழே விழுந்த சிறுமி இறந்துவிட்டார். இதனால் தான் சிறைக்கு செல்வேன் என பயந்து சடலத்தை மறைத்துவிடுவோம் என கூறி கணவரை சம்மதிக்க வைத்துள்ளார். பின்னர் உடலை நிர்வாணமாக்கி சடலத்துடன் சூட்கேசை அடைத்து காரில் சேலம் கொண்டு வந்து வீசிவிட்டு தம்பதி ஒடிசாவில் பதுங்கியது தெரியவந்தது. இந்த வழக்கில் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Readmore: சர்க்கரை நோயாளிகளுக்கு புதிய திட்டம்!. இனி கால் இழப்புக்கு குட்பை!. இலக்கு நிர்ணயித்த தமிழக அரசு!