சபரிமலை செல்லும் பக்தர்கள் ரயில் பயணத்தின்போது, கற்பூரம் ஏற்றினால் ரூ.1,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சபரிமலை செல்லும் பக்தர்கள் சிலர், ரயில் பயணத்தின்போது கற்பூரம் ஏற்றி, பூஜை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இந்தநிலையில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயில் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் கற்பூரம் உள்ளிட்ட தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருள்களுடன் பயணிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு ரூ.1000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். எனவே, பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய ரயில்களில் கற்பூரம் ஏற்றுவதையோ, எரியக்கூடிய பொருட்களை எடுத்துச்செல்வதையோ பயணிகள் தவிர்க்கவேண்டும். யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் 139 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணெய் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Readmore: கெங்கவல்லி கிறிஸ்து அரசர் ஆலய தேர் திருவிழா டிச.8ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு..!!