மகர விளக்கு ஜோதி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, சபரிமலை செல்லும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கேரளா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகம், தெலுங்கானா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிகின்றனர். மார்கழி மாதத்தில் இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை விழாவிற்காக, கோவில் நடை கார்த்திகை மாதம் முழுவதும் திறக்கப்பட்டிருக்கும். இந்த காலகட்டங்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில், இதுதொடர்பாக இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா (ஐயப்பன்) கோவிலில் மண்டல பூஜை 15.11.2024 முதல் 26.12.2024 வரையும் மற்றும் மகர விளக்கு ஜோதி திருவிழா 30.12.2024 முதல் 19.01.2025 வரையும் நடைபெறுவதை முன்னிட்டு, சபரிமலை செல்லும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மையச் சேவையினை கட்டணமில்லா தொலைபேசி எண்களான 044-28339999 மற்றும் 1800 425 1757-ல் அழைத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இந்த சேவை மையம் 24.01.2025 வரை செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

Readmore: தாய்மார்களே உஷார்!. குழந்தைகளுக்கு வெந்நீர் கொடுங்கள்!. எவ்வளவு பலன்கள் தெரியுமா?