பட்டா என்பது ஒரு நிலத்துக்காக வருவாய்த் துறை வழங்கும் பதிவு ஆவணம் ஆகும். சிட்டா என்பது சொத்து அமைந்துள்ள பகுதி, அளவு, உரிமையாளர் முதலான விவரங்களை உள்ளடக்கிய ஆவணம் ஆகும். கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து இந்த இரு ஆவணங்களும் இணைக்கப்பட்டு, பட்டா சார்ந்த தகவல்கள் அனைத்தும் ஓரே ஆவணத்தில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. குடிமக்கள் தங்களது சிட்டா பட்டா, அடங்கல் சான்றிதழ்களை இப்போது ஆன்லைன் மூலமாகவும் பார்க்க முடியும்.
அந்தவகையில் தற்போது, வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்குவோர்களின் வசதிக்காகவே, புதிய வசதியை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான இணைய தள வசதி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, சொத்து தொடர்பான வழக்கு விபரங்கள், நீதிமன்ற தடை உத்தரவுகள் எதுவும், வில்லங்க சான்றிதழ்களில் தெளிவாக தெரிவதில்லை. சொத்து உரிமை மாற்றம் தொடர்பாக கோர்ட் பிறப்பித்த உத்தரவை, சம்பந்தப்பட்டவர்கள் சார் – பதிவாளரிடம் தாக்கல் செய்தால் மட்டுமே, அதுகுறித்து தெரியவரும்..
மற்றபடி வழக்குகள் நிலுவையில் இருப்பது, அதன் தற்போதைய நிலவரம் இதெல்லாம் மக்களுக்கு தெரிவதில்லை. இந்த வழக்கு விபரம் எதுவும் தெரியாமல், அந்த சொத்துக்களை வாங்கிட நேர்ந்துவிடுகிறது.. பத்திரப்பதிவுக்கு போகும்போதுதான், வழக்குகள் பற்றி தெரியவருகிறது. ஆனால், அந்த நேரத்தில் வேறு எதையும் செய்ய முடிவதில்லை.. இந்த சிக்கலை தீர்க்கவே வருவாய் துறை முக்கிய அதிரடியை கையிலெடுத்து வருகிறது.
பட்டா, நில அளவை: அதன்படி, பட்டா, “அ” பதிவேடு, நில அளவை வரைபடம் போன்ற விபரங்களை, ஆன்லைன் முறையில் பொது மக்கள் பெற வேண்டும் என்பதற்காக இ – சேவை இணையதளத்தில் வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த வசதியை, www.clip.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மக்கள் பெறலாம்.
Readmore: இனி எல்லாம் டிஜிட்டல்தான்!. ஏடிஎம்களாக மாறும் ரேஷன் கடைகள்!.