இந்தாண்டு அக்டோபடர் 3ம் தேதி தொடங்கிய நவராத்திரி விழா, அக்டோபர் 12ம் தேதி வரை மக்கள் விரதம் இருந்து வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபடுவது வழக்கம். இதேபோல், அம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்தவகையில் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் செய்து காப்புக்கட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.

9 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு அலங்காரம் நடைபெற உள்ளது. கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு இதில் சிறுவர் சிறுமிகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படும். இதையடுத்து, தங்க ரத ஊர்வலத்தில் சென்று வில், அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் முத்துக்குமார சாமி பெரியநாயகி அம்மன் கோவில், பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்தநிலையில், நவராத்திரி விழாவையொட்டி காப்புக் கட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அக்டோபர் 11 ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையும், 12 ஆம் தேதி விஜயதசமி அன்று பழனி கோயிலில் அம்பு வில் போடுதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. இதனையொட்டி, பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜை, அலங்காரம், ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. நவராத்திரி விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடுகள் விதித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில், விஜயதசமி தினத்தன்று காலை 11.30 மணி முதல் அனைத்து தரிசனக் கட்டண சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும்.

மலைக் கோயிலின் படிப் பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் என மூன்று வழிப் பாதைகளில் 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 11 மணிக்குப் பிறகு வரும் பக்தர்கள் மலைக் கோயிலுக்குச் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, மறுநாள் முதல் வழக்கம்போல பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் எப்போதும் போல தரிசனத்துக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: ’ஏற்காட்டில் இனி மிதந்துகிட்டே சாப்பிடலாம்’..!! இன்னும் பல வசதிகள்..!! அமைச்சர் ராஜேந்திரன் சொன்ன குட் நியூஸ்..!!