காதலியை சேர்த்து வைக்கக் கோரி மது போதையில் வந்த காதலன், கிணற்றில் குதித்த சம்பவம் எடப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குஞ்சாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் மகன் விஜய். இவரும், கொங்கணாபுரம் அருகே பாலப்பட்டி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியின் வீட்டிற்கு மதுபோதையில் வந்த காதலன் விஜய், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறி கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதற்கு மாணவியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பாலப்பட்டி அருகில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து, தற்கொலை செய்து கொள்வதாக விஜய் மிரட்டியுள்ளார். ஆனால், இதை மாணவியின் குடும்பத்தினர் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில், விஜய் கிணற்றுக்குள் குதித்துள்ளார். தொடர்ந்து 4 முறை குதித்தவர் 5-வது முறை மேலே வர முடியாமல் உள்ளேயே சிக்கித் தவித்துள்ளார்.

இதையடுத்து, காதலியின் உறவினர்கள் கொங்கணாபுரம் காவல் நிலையத்திற்கும், எடப்பாடி தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்ததை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விஜய்யை பத்திரமாக மீட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசர், இளைஞர் விஜய்க்கு எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த மாணவியும், விஜய்யுடன் செல்வதாக கூறியதால் அந்த பெண்ணின் உறவினர்கள் எச்சரிக்கை விடுத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

Read More : எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது..!! அண்ணாமலை அழிவை நோக்கிச் செல்கிறார்..!! ஜெயக்குமார் கடும் விமர்சனம்..!!