சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, சகோதரர் பொன்னை பாலு உள்ளிட்ட 24 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் குற்றவாளி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை மாறி, மாறி போலீஸ் காலில் எடுத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வழக்கறிஞர் சிவா, மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில், சென்னையில் வழக்கறிஞர் சிவா கைது செய்யப்பட்டார். இதையடுத்து, மொட்டை கிருஷ்ணனை தேடி வந்த நிலையில், அவர் குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மொட்டை கிருஷ்ணன் உடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா, மொட்டை கிருஷ்ணன் உடன் அடிக்கடி தொலைப்பேசியில் உரையாடி வந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் நெல்சனின் மனைவி மோனிஷாடம், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் மொட்டை கிருஷ்ணன் குறித்து இயக்குனர் நெல்சனிடம் தனிப்படை
போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : இன்ஸ்டா மோகத்தால் பறிபோன வங்கி ஊழியரின் ரூ. 2.50 லட்சம்…! ஆட்டைய போட்ட பெண்ணுக்கு வலைவீச்சு…!