அர்ச்சகர்கள் பிள்ளைகளின் மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகையாக 500 மாணவர்களுக்கு ரூ.50 லட்சத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூசைத் திட்ட கோவில்களில் பணி புரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் மற்றும் மகள்களின் மேற்படிப்பிற்கான கல்வித் உதவித்தொகையாக 500 மாணவர்களுக்கு மொத்தம் 50 லட்சம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய்க்கான வங்கி வரைவோலைகளை வழங்கினார்.
இதன்மூலம் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம் போன்ற உயர்கல்வி பயிலும் அர்ச்சகர்களின் பிள்ளைகள் பயன்பெறுவர். கடந்தாண்டு இத்திட்டத்தின் மூலம் 400 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Readmore: அதிகமா லீவு எடுக்கும் மாணவர்கள்!. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு!