இந்த உலகில் மிகவும் நல்ல மனிதர் ஏ.ஆர்.ரஹ்மான், விவாகரத்து குறித்து பொய்யான தகவலை பரப்புவதை தயவு செய்து நிறுத்துங்கள் என்று மனைவி சாய்ரா பானு ஆடியோ வெளியிட்டுள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதி சில நாட்களுக்கு முன் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர். சிறிதுநேரத்திலேயே ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்குழுவில் இடம்பெற்றுள்ள கிட்டரிஸ்ட் மோகினி டேவும் அவரது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி பல விதமான கருத்துக்கள், விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், சாய்ரா பானு ஆடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் சாய்ரா பானு பேசுகிறேன். நான் இப்போது மும்பையில் தங்கி இருக்கிறேன். யூடியூபர் மற்றும் தமிழ் மீடியா தயவு செய்து ஏ.ஆர்.ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள். அவர் அற்புதமான மனிதர். இந்த உலகில் மிகவும் நல்ல மனிதர். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், நான் இப்போது சென்னையில் இல்லை. மும்பையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன். பிசியான காலகட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் இருக்கிறார். அவரையோ, என் குழந்தைகளையோ தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. விவாகரத்து குறித்து பொய்யான தகவலை பரப்புவதை தயவு செய்து நிறுத்துங்கள். விரைவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்புவேன். நன்றி என்று பேசியுள்ளார்.