2025ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக கைத்தறித் துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு பொங்கல் பண்டிகையின் போது அதனை சிறப்பாக கொண்டாடிம் வகையில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பரிசுடன் விலையில்லா வேட்டி, சேலைகளும் கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதுடன், கைத்தறி நெசவாளர்களும் அதிகளவில் பயன்பெற்று வருகிறார்கள். வரும் 2025ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் பணிகள் விசைத் தறி மற்றும் கைத்தறிகள் அதிகமுள்ள கொங்கு பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி – சேலையை ஒவ்வொரு ஆண்டும் அரசு வழங்குகிறது. இந்தாண்டு எப்போது அது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், கைத்தறித் துறை அமைச்சர் ஆர். காந்தி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேர்தல் காரணமாக தயாரிப்புப் பணிகள் தாமதமடைந்துள்ளதாகவும், இருப்பினும் ஜனவரி 15ம் தேதிக்கு முன்பே வழங்கப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளார்.