சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் 100 ஆண்டுகள் பழமையான தூய கிறிஸ்து அரசர் தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தேர்த்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு தேர் திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி, மாலையில் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கிறிஸ்து அரசர், புனித நிக்கல், ஆரோக்யமாதா ஆகிய 3 தேர்கள் திருவீதி உலா எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அப்போது, தேர்களிலும் சிலைகள் எடுத்துச் சென்று வைப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக, தேரினை திருவீதி உலா எடுத்துச் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். பின்னர், இருதரப்பினரிடமும் போலீசார் சுமூக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தேர்களில் சிலைகள் வைக்கப்படாததால், தேர்த்திருவிழா நடைபெறவில்லை.

இதற்கிடையே, தேரோட்டத்தை நடத்த வேண்டுமென கிறிஸ்தவர்கள் சேலம் மறை மாவட்ட ஆயர் அருள் செல்வத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இரு தரப்பினரையும் அழைத்து பேசி சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து வரும் டிசம்பர் 8ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நிறுத்தப்பட்ட தேரோட்டம் மாலை 6 மணியளவில் மீண்டும் நடைபெறும் என மறை மாவட்ட ஆயர் அறிவித்துள்ளார்.

Read More : சாலையில் புகுந்த ஆற்றுநீர்!. எடப்பாடி – குமாரபாளையம் இடையே போக்குவரத்துக்கு தடை!. பரிசலில் செல்லும் மக்கள்!.