மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை முழுகொள்ளளவை எட்டியுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது. இந்த அணை 33 அடி கொள்ளளவு கொண்ட அணையாகும். மழைக்காலங்களில் மலைப்பகுதிகளில் பொழியும் மழை நீர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு கோடை காலங்களில் பாசனத் திற்காகவும், வன விலங்குகளின் தாகம் தீர்க்கும் தண்ணீராகவும் பயன்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் பர்கூர் மலை மற்றும் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேறி வந்தது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து அந்தியூர் மற்றும் பர்கூர் மலை சுற்றுப் பகுதி மற்றும் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்த மழைப் பொழிவால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி வருவதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Readmore: ஈரோட்டில் திடீரென தீப்பிடித்த சரக்கு லாரி!. பல லட்சம் மதிப்பிலான பேட்டரிகள் எரிந்து சேதம்!