வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி ரூ.100 நோட்டு தொடர்பாக ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, பழைய 100 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில், பழைய 100 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் இருப்பதாகவும், அவை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. பழைய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் செல்லாதவை என்று அறிவிக்கப்பட உள்ளதாகவும், உடனடியாக மாற்ற வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்த தகவல்கள் தவறானவை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பழைய நோட்டுகளை மாற்ற கால அவகாசம் வழங்கப்படவில்லை என்றும், பழைய மற்றும் புதிய ரூ.100 நோட்டுகள் இரண்டும் சட்டப்படி செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. அதாவது உங்கள் தினசரி பரிவர்த்தனைகளில் இரண்டு வகையான நோட்டுகளையும் பயன்படுத்தலாம். இந்த நோட்டுகளை வாங்க எந்த கடைக்காரரும், மறுக்கக்கூடாது.

பழைய 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற தகவல் தவறானது என்றும், நோட்டுகளை மாற்ற கடைசி தேதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோட்டு மாற்றம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனவும், பழைய நோட்டுகளை படிப்படியாக ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டும் என்றும் மக்களுக்கு ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.

Readmore: தந்தைக்கு சித்தி மீது ஆசை!. குழந்தைகளை காவு வாங்கிய சித்தப்பா கைது!. திடுக்கிடும் வாக்குமூலம்