சங்ககிரி மலைக்கோட்டை பின்புற பகுதிகளில் மர்ம விலங்கின் கால்தடம் பதிவாகியுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி மலைக்கோட்டையின் பின்புறம் கலியனூர் – ராயலூர் சாலையில், மர்ம விலங்கின் கால்தடம் பதிவாகியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், நவீன தெர்மல் ட்ரோன் கேமரா மூலம் அப்பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக நடைபெற்றுவரும் ஆய்வு பணியில் எந்த விலங்கின் நடமாட்டமும் தென்படவில்லை.

இருப்பினும் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதால், வனவர் தினேஷ், வனக்காப்பாளர் முத்துராஜா, உள்ளிட்டோர் தலைமையில் வனத்துறையினர் குழு அமைக்கப்பட்டு தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், சமூக வலைதளங்களில் பரவிய செய்திகள் போலியானதா என்ற கோணத்திலும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Readmore: உஷார்!. இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா?. இந்த நோயின் ஆரம்ப அறிகுறி!