ஜூசில் மது கலந்து கொடுத்து, இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே வடகரை பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஜாஸ்மின். இவருக்கு வயது 28 ஆகும் நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராம் மூலம் சந்தேரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவருக்கு 16 வயதில் ஒரு மகனும் உள்ளார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான இருவரும் செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டு, மணிக்கணக்கில் பேசி வந்துள்ளனர். பின்னர், இருவரும் நேரில் சந்திக்க தொடங்கினர். முகமது, அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று தங்கி வந்துள்ளார். அப்போது, இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் தான், அந்த இளம்பெண்ணுக்கு முகமது, ஜூசில் மது கலந்து கொடுத்துள்ளார்.

இதை குடித்ததும் அந்தப் பெண் போதையில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து, முகமது, தனது செல்போனை எடுத்து, அந்த இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். பிறகு, அந்த வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பி வைத்துவிடுவேன் எனக்கூறி இளம்பெண்ணை அடிக்கடி பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இதற்கிடையே, ஒருமுறை அந்த ஆபாச வீடியோவை இளம்பெண்ணின் மகனுக்கு அனுப்பி வைத்துள்ளார் முகமது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன், சந்தேரா காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசர், வெளிநாடு தப்பிச் செல்ல இருந்த முகமதுரை கோழிக்கோடு விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

Read More : போலீஸை கொன்று உடலை எரித்த ஆட்டோ ஓட்டுநர்..!! Gpay மூலம் குற்றவாளியை சுட்டுப்பிடித்த பரபரப்பு சம்பவம்..!!