சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் கட்சியில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சேலம் மாநகர் மாவட்ட அதிமுக பணிகளை கவனிக்க எம்.கே.செல்வராஜ், பாலு ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் அமைப்பு ரீதியாக அ.தி.மு.க.வில் மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்டம் என 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இதில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாஜலம் பதவி வகித்து வந்தார். இவரை மறைந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாநகர் மாவட்ட செயலாளராக அறிவித்தார். இதையடுத்து வெங்கடாஜலம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 8 வருடங்களாக மாநகர் மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் அவர் மாநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய பொறுப்பாளர்களாக 2 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த வெங்கடாஜலத்தை இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவித்து சேலம் மாநகர் மாவட்ட கழக பணிகளை மேற்கொள்வதற்காக புதிய பொறுப்பாளர்களாக அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் எம்.கே.செல்வராஜ், சூரமங்கலம் பகுதி-2 கழக செயலாளராக இருந்த ஏ.கே.எஸ்.எம்.பாலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Readmore; சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை!. கடன் பிரச்சனையால் வெள்ளி பட்டறை உரிமையாளர் விபரீத முடிவு!. தீவிர விசாரணை!