அதிமுக கூட்டணிக்கு பெரிய கட்சிகள் வந்தால் கூடுதல் இடங்களை கொடுக்கலாம் என்றும் விஜய்யுடனான கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி சூசகமாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் நிர்வாகிகளுடனான ஆலோசனையில் பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , அதிமுக கண்டிப்பாக அடுத்த்ஸ் சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைக்கும். திமுக கூட்டணி வலிமையாக இல்லை. அவர்களின் கூட்டணியில் பிரச்சனை உள்ளது. அதிமுக வேகமாக வளர்ந்து வருகிறது. அவர்களின் கூட்டணி உடையும் . அதிமுக பெரிய கூட்டணி அமைக்கும். ஆனால் நாம் அதற்கு முன் கட்சியை வலுப்படுத்த வேண்டும். மாவட்ட அளவில் கட்சியில் கூட்டங்களை நடத்த வேண்டும்.

நமக்கு கூட்டணி வேண்டும் என்றால்.. நாம் வலிமையாக இருக்க வேண்டும். நாம் வலிமையாக இருந்தால்தான் கட்சிகள் கூட்டணிக்கு தயாராக இருக்கும். அதோடு இல்லாமல் நாம் வலிமையாக இருந்தால் கூட்டணியில் அதிக இடங்களை வைத்துக்கொள்ள முடியும். பெரிய கட்சிகள் வந்தால் கூடுதல் இடங்களை கொடுக்கலாம்.

புதிய நிர்வாகிகளை சேர்க்க வேண்டும். செயல் வீரர்கள் கூட்டம் நடத்த வேண்டும். அப்போதுதான் கட்சி வலிமை அடையும். முக்கியமாக பூத் கமிட்டியை அமைக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்ட பூத் கமிட்டியை புதுப்பிக்க வேண்டும். இதுதான் இப்போது அவசியம் என்று எடப்பாடி பழனிசாமி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசி இருக்கிறாராம்.

இதில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி உருவாக்கப்பட்டால் அவர்களுக்கு அதிக இடங்களை கொடுக்க அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளாராம். நேற்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதாக கூறப்படுகிறது.

Readmore: குளிக்கும்போது தண்ணீரில் கல் உப்பை கலந்து குளியுங்கள்..!! உடல் வலி பறந்து போகும்..!!