அரசு போக்குவரத்துக்கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த நிறுவனம் மூலமாக நிரப்பி வந்த நிலையில், தற்போது மேலும் காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, டிரைவர் மற்றும் நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2,340 டிசிசி பணியாளர்கள் மற்றும் 537 தொழில்நுட்ப பணியாளர்கள் காலி இடங்களை நிரப்ப அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதில் 307 டிசிசி மற்றும் 462 தொழில்நுட்ப பணியாளர்கள் என்று மொத்தம் 769 காலி இடங்கள் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மீதம் உள்ள 2108 பணியிடங்கள் மற்ற பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 307 டிசிசி 75 தொழில்நுட்ப பணியாளர்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஒப்பந்த நிறுவனம் மூலமாக 234 ஓட்டுநர், நடத்துநர்களைத் தேர்வுசெய்வதற்காக டெண்டர் வெளியிட்டிருந்தது. இதற்கு அரசியல் கட்சியினரும், தொழிற்சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவிதனர். ஆனால், போதுமான அளவு டிரைவர்கள், நடத்துனர்கள் கலந்துகொள்ளாத நிலையே ஏற்பட்டது. இருந்தாலும் தனியார் மூலமே பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்கள் அரசு நேரடியாக நியமனம் செய்யுமா அல்லது ஒப்பந்ததாரர் மூலம் நியமனம் செய்யுமா என்பது விரைவில் தெரிய வரும். ஏற்கனவே ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் ஓட்டுநர்கள், நடத்துனர்களை நியமிப்பது தொடர்பான அறிவிப்பு தொழிற்சங்கத்தினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Readmore: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10000 கன அடியாக சரிவு!. காவிரி டெல்டாவுக்கு நீர் திறப்பு அதிகரிப்பு!