நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் திட்டத்தின் கீழ் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. உணவு தானியங்கள் மட்டுமல்லாமல், மளிகைப் பொருட்கள், பரிசுத் தொகுப்பு, நிதியுதவி போன்ற உதவிகளும் கிடைக்கின்றன. ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கும். அந்தவகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல் வந்துள்ளது.

அதாவது மற்ற மாநிலங்களை போல், தமிழகத்திலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதாவது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு, ஏழை எளிய மக்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை தீபாவளிக்கு தொகுப்பாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் வருகிற அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் தீபாவளி தொகுப்பாக மைதா, ரவை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தீபாவளி தொகுப்பு தொடர்பாக உணவு பொருட்கள் வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Readmore: ”ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அல்ல”..!! தொண்டர்களுக்கு விஜய் எழுதிய முதல் கடிதம்!.