தீபாவளிக்கு அடுத்தநாள் நவம்பர் 1-ம் தேதியும் விடுமுறை அறிவிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் தீபாவளி பண்டிகையை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். தீபாவளிக்கு இன்னும் 15 நாட்களுக்கு குறைவான நாட்களே இருப்பதால், மக்கள் ஜவுளி கடைகளிலும், பட்டாசு கடைகளுக்கும் படையெடுத்து வருகின்றனர். பொதுவாக தீபாவளி பண்டிகையை பொறுத்தவரை அன்று ஒரு தினம் மட்டுமே தான் அரசு விடுமுறை அறிவிக்கப்படும்.

ஆனால் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையை , பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் தான் ஒவ்வொரு ஆண்டும் அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் வரும் நவம்பர் 1ம் தேதி(வெள்ளிக்கிழமை) ஒருநாள் மட்டும் விடுமுறையை அரசு அறிவித்தால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

அந்தவகையில், நவம்பர் 1-ந் தேதி விடுமுறை அறிவிக்க தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் அமிர்தகுமார், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியதன் அடிப்படையில், தீபாவளி மறுநாள் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Readmore: வந்தாச்சு குட்நியூஸ்!. தமிழக அரசு ஊழியர்களுக்கும் 3 % அகவிலைப்படி உயர்வு!.