இன்று நடைபெறும் மக்கள் குறைதீர் முகாம் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், ஊர் மாற்றம் செய்து கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
அதன்படி, அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், ஊர் மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், கடை மாற்றம், தொடர்பான கோரிக்கைகள், புகார்களையும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: இதுமட்டும் கட்சியில் நடக்கவே கூடாது!. கோபமடைந்து பேசிய விஜய்!. சூசகமாக கூறிய புஸ்ஸி ஆனந்த்!