ஃபேஸ்புக்கில் அறிமுகமாகி வேலை வாங்கித் தருவதாக கூறி சேலம் இளைஞரிடம் ரூ.1.50 லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மஜ்ரா கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ். 33 வயதான இவர், வேலை தேடி வந்துள்ளார். அந்த சமயத்தில் முகநூலில் ஒருவர் நண்பராகியுள்ளார். இதையடுத்து, தான் வேலை தேடி வருவதாக சதீஷ் அந்த நபரிடம் கூறியுள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட அந்த நபர், வேலை வாய்ப்பு அலுவலகம் நடத்தி வருகிறேன் என்றும் மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரியுடன் பழக்கம் உள்ளதாகவும், ஏற்காட்டில் உள்ள ஒரு வங்கியில் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி சதீஷை நம்ப வைத்துள்ளார்.
இதையடுத்து, வங்கி வேலை என்பதால், 2.50 லட்சம் ரூபாய் முதலில் நீங்கள் கொடுக்கவேண்டும் என்று கூறியதையடுத்து, சதீஷ், ‘கூகுள்-பே’ மூலம், 1.52 லட்சம் ரூபாயை அனுப்பினார். பணத்தை பெற்ற அவர், ஓராண்டாகியும் வேலை வாங்கி தரவில்லை. பின் சரிவர பதில் இல்லாததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதீஷ், இரும்பாலை போலீசில் புகார் கொடுத்தார். பேஸ்புக் ஐ.டி., மூலம் நடத்திய விசாரணையில், சென்னை, திருமுல்லைவாயிலை சேர்ந்த சிவக்குமார் என தெரிந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Readmore: சேலத்தில் அதிர்ச்சி!. சொத்து தகராறில் பள்ளி மாணவர்கள் வெட்டிக்கொலை!. அக்கா, தம்பிக்கு நேர்ந்த சோகம்!.