சமூக வலைதளத்தில் பழகி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சென்னையை சேர்ந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

இன்றைய காலத்தில் குடும்ப நிகழ்ச்சிகளிலிருந்து குடும்ப உறுப்பினர்கள் வரை அனைத்தையுமே நாம் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற எல்லாவற்றிலும் பகிர்ந்து வருகிறோம். சமூக வலைதள ஆதிக்கம் பெருகிவிட்ட இந்த காலத்தில் கைகள் இல்லாமல் கூட இருந்து விடலாம், ஆனால் கைகளில் செல்போன்கள் இல்லாமல் மாணவர்களையோ இளைஞர்களையோ காண முடியாது என்ற நிலை தான் இருக்கிறது.

ஒரு சில நிமிடங்கள் அற்ப மகிழ்ச்சியை தரும் இன்ஸ்டாகிராம் லைக்குகளுக்காகவும், ஃபேஸ்புக் கமெண்ட்களுக்காகவும் அடிமையாகி தங்களது வாழ்வையே தொலைக்கும் கல்லூரி மாணவிகள் பள்ளி மாணவிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் நடைபெறும் குற்றங்கள் தான் பெற்றோர்களை பெறும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அந்தவகையில், சென்னையை சேர்ந்தவர் கார்த்திக்(30) சமூக வலைதளத்தில் ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியிடம் பழகியுள்ளார். இதையடுத்து திருமண ஆசை வார்த்தை காட்டி மாணவியை நேரில் சந்திக்கலாம் என அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். மூன்று மாத கர்ப்பமான நிலையில், இதையறிந்த பெற்றோர், ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான வாலிபரை தேடி வருகின்றனர்.

Readmore: ஒரே இடத்தில் 36 மணி நேரம் நிற்கும்..!! டெல்டா மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்யும்..!! தனியார் வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை..!!