தமிழ்நாட்டில் விவசாய பணிகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், முக்கியமான திட்டம் தான், விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம். இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில், தற்போது 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன. இதற்காக ஒவ்வொரு மின் இணைப்புக்கும் ஆண்டுதோறும் 30,000 ரூபாயை மின்சாரத்துறைக்கு வேளாண்மைத்துறை வழங்கி வருகிறது.
ஆனால், இந்த இலவச மின்சாரத்தை சிலர் விவசாயம் அல்லாத நோக்கங்களுக்கு பயன்படுத்துவதாக மின்சார வாரியத்திற்கு புகார்கள் வந்துள்ளன. ஏற்கனவே, மின்சார துறை கடும் நிதி சுமையில் இருக்கும் நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு அதிரடி திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
அதன்படி, மின்துறைக்கு வந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட வாரியாக ஆய்வு செய்து விவசாய பயன்பாட்டில் இல்லாத இலவச மின் இணைப்புகளை கணக்கெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
Read More : 15 வயது சிறுமியை மனைவியாக்கிய இளைஞர்..!! போலீஸை பார்த்ததும் தெறித்து ஓடிய 2கே கிட்..!!