அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் குறித்து சில காலமாக பரவி வரும் நிலையில் அபிஷேக் பச்சன் திருமண மோதிரம் அணியாமல் செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இந்த ஜோடி அன்றிலிருந்து ஒன்றாக இருந்து வருகிறது. 2011-ஆம் ஆண்டு முதல் பெண் குழந்தை ஆராத்யாவை பெற்றுக்கொண்டார்கள். சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பற்றி வதந்தியான தகவல்கள் பரவுவதும் அதன்பிறகு அந்த வதந்தி குறித்து அந்த பிரபலங்களும் விளக்கம் அளிப்பது உண்டு. அந்த வகையில், நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய கணவர் அபிஷேக் பச்சனுக்கும் விவகாரத்து ஆகிவிட்டதாக பரபரப்பான செய்தி வெளியான வண்ணம் உள்ளது. ஆம், பாலிவுட்டில் பிரபல ஜோடிகளான அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா அண்மைய காலமாக வெளி இடங்களில் ஒன்றாக காணப்படவில்லை. சமீபத்தில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தால் இந்த விவாகரத்து வதந்தி மேலும் தூண்டப்பட்டது.
திருமணத்தில், அபிஷேக் தனது பெற்றோர், சகோதரி மற்றும் மைத்துனருடன் திருமணத்திற்கு வந்திருந்த நிலையில், மறுபக்கம் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் தனித்தனியாக விழாவில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டதாக, செய்திகளை நெட்டிசன்கள் பரப்ப தொடங்கினர். மேலும் இந்த விவகாரத்தில் இருவரும் அமைதியாக இருப்பதால், இது உண்மையோ என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், அதனை நிராகரிக்கும் வகையில் ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா, கணவர் அபிஷேக் பச்சன் என மூன்று பேரும் துபாய் விமான நிலையத்தில் இறங்கி விமான நிலைய பஸ்ஸில் ஏறிச்சென்ற வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.
வீடியோவை காண : https://www.instagram.com/reel/C_ZrCBCtLtF/?utm_source=ig_web_copy_link
முதலில் அபிஷேக் பச்சன் செல்கிறார். பின்னால் ஐஸ்வர்யா ராயும், மகள் ஆராத்யாவும் செல்கின்றனர். அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைவதற்காகத் துபாய் சென்றார்களா அல்லது விடுமுறையைக் கழிப்பதற்காக வந்தார்களா என்று தெரியவில்லை. இருப்பினும் தற்போது மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது அபிஷேக் பச்சன் கையில் திருமண மோதிரம் இல்லாமல் இருக்கும் வீடியோ வெளியாகி பேசிபொருளாகியுள்ளது.