கத்தி முனையில் வீடு புகுந்து இளம்பெண்ணை வன்கொடுமை செய்த நிலையில், தனது நண்பனுக்கும் விருந்தாக்கிய சம்பவம் விருத்தாசலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 29 வயது இளம்பெண்ணுக்கு திருமணமாகி தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். இதற்கிடையே, கணவருக்கு துபாயில் வேலை கிடைத்ததால், அவர் அங்கு சென்றுவிட்டார். இந்நிலையில், இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட பக்கத்து கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர், குடிபோதையில் அந்த பெண்ணின் வீட்டிற்கு நுழைந்துள்ளார்.
பின்னர், கத்தியை காட்டி மிரட்டி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளர். மேலும், இந்த சம்பவத்தை அவர் வீடியோவாகவும் செல்போனில் பதிவு செய்து கொண்டார். இதையடுத்து, அந்த வீடியோவை காட்டி மிரட்டி, அந்த பெண்ணை அடிக்கடி பலாத்காரம் செய்து வந்துள்ளார் சிவக்குமார். மேலும், அந்த வீடியோவை தனது நண்பன் வினோத்துக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வினோத்தும் அந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். நண்பர்கள் இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணிடம் இருந்து ரூ.50,000 பணம், 3 சவரன் நகைகளை வாங்கியுள்ளனர். மேலும், அடிக்கடி மிரட்டி தொல்லை கொடுத்து வந்ததால், பொறுமையை இழந்த அந்தப் பெண் கம்மாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரிடமும் விசாரணை நடத்தி அவர்களை கைது செய்தனர்.