குடும்ப பிரச்சனை காரணமாக தாய் மற்றும் 4 சகோதரிகளை கொடூரமாக கொன்ற இளைஞர், பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு ஓட்டலில், தாய் மற்றும் அவரது 4 மகள்கள் பிணமாக கண்டெடுக்கப்பட்டன. இதுதொடர்பான விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக அர்ஷத் என்ற இளைஞர் தனது தாய் மற்றும் சகோதரிகளுக்கு போதை உணவு மற்றும் மதுவை வழங்கி கொலை செய்துள்ளார்.
நடந்தது என்ன..?
முதற்கட்ட விசாரணையில், சாப்பிடும் உணவில் போதையை கலந்து கொடுத்து இளைஞர் அர்ஷத் குடும்பத்தையே கொலை செய்துள்ளார். உணவு மற்றும் மதுவில் விஷம் கலந்து கொடுத்தப் பிறகு சிலர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாகவும், சிலர் பிளேடால் மணிக்கட்டு போன்ற இடங்களில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் காவல்துறை கூறியுள்ளது. கொல்லப்பட்ட 5 பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதே இந்த கொலைக்கு காரணமாக இருந்துள்ளது. விசாரணை முடிந்ததும், கொலையாளியின் நோக்கம் குறித்த கூடுதல் தகவல்களை வெளிப்படுத்துவோம் என போலீசார் கூறியுள்ளனர். இந்த கொலை வழக்கில் மகன் அர்ஷாத் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தந்தை பதர் என்பவரையும் போலீசார் சந்தேக நபராக குறிப்பிட்டு, தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.