கடலூர் அருகே செயின் பறிப்பு முயற்சியின் போது விபத்தில் சிக்கிய திருடன். சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் ஏறி செல்லும் போது வசமாக போலீசிடமே சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த சந்தோஷ் சுதா தம்பதி தங்களது இரண்டு குழந்தைகளோடு கடலூர் அடுத்த பொன்னன்திட்டுபகுதியை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், ஆழப்பாக்கம் மேம்பாலத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது பின்னே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் சுதா கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இதனை சுதாரித்துக் கொண்ட சுதா அந்த இளைஞரின் சட்டையை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். இதில் இரண்டு வாகனங்களும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தன.
இதில், சிக்கிக் கொள்வோம் நினைத்த அந்த நபர் பலத்த காயங்களோடு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த விபத்தில் கால் எலும்பு முறிவுடன் சுதாவும் லேசான காயங்களுடன் அவரது கணவரும் கடலூர் அரசு மருத்துவமனைகள் சிகிச்சை அனுமதிக்கபட்டுள்ளனர். மேலும், அவர்களுடைய இரண்டு ககுழந்தைகளும் சிறிய காயங்களுடன் தப்பினர். சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்ற திருடன் காயங்களுக்கு சிகிச்சை எடுப்பதற்காக 108 ஆம்புலன்ஸை கால் செய்து வரவழைத்து அதில் ஏறி நேராக கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இது குறித்து அருகே இருந்த காவல் நிலையத்தில் கொடுத்த தகவலின் பேரில் ஜெயின் பறிப்பு முயற்சிகள் இருந்து தப்பி வந்த தம்பதியிடம் புகாரை பெறுவதற்காக அதே மருத்துவமனைக்கு புதுச்சத்திரம் போலீஸ்சாரும் வந்துள்ளனர். விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர் அங்கே சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்த மருத்துவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் சென்று விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். பின்னர், சந்தேகமடைந்த அவரை புகைப்படம் எடுத்து போலீசார் சுதாவிடம் சென்று காட்டிய போது தனது செயினை பறிக்க முயன்ற திருடன் இவன் தான் என்பது உறுதியளித்துள்ளார். மேலும், அவர் வடலுரைச் சேர்ந்த அஜித்குமார் என தெரிய வந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
Read More : ‘அனுமதியின்றி இதை யாரும் செய்யாதீங்க’..!! கட்சி நிர்வாகிகளுக்கு தவெக எச்சரிக்கை..!!