சென்னை அடுத்த ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் முன்பு வைத்து தனது மைத்துனரை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து, சம்பவம் குறித்து விசாரணையில், குரு சத்தியா என்பவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாகவும் அவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி திவ்யாவை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக திவ்யா அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து புகாரின் அடிப்படையில் விசாரணைக்காக இருவரும் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அப்போது திவ்யாவை குரு சத்யா ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆக்கிரமடைந்த திவ்யாவின் அண்ணன் மகேஸ்வரன் தனது வீட்டுக்கு சென்று கத்தி ஒன்றை எடுத்து குரு சத்யாவின் முதுகில் குத்தியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையம் முன்பு கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Read More:வேலைக்கு சேர்ந்த 3 நாளில் பணி பெண் செய்த செயல்..! 6 லட்சம் அபேஷ்…!!